மகா பிரதோசம்
ஈசன்
விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை
திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.
சகல
நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில்
அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான
நந்தி தேவர்தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப
விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.
ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். மனம் வருந்திய
நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி
பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார்.
நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக
கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை
சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று
பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவற்கு வலதுபுறம்
நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி ""ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே"" என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை
ஜெபித்து பூசை செய்தார்.
நந்தி
தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும். தேய்பிறை
பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும்
கூடி வரும் 4.30 - 6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட
வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவருக்கு முனிவர்
சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர்
வாக்கு. 13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு
செய்பவர்களிற்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூசை
செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும்
பலன் கிட்டும்.
சகல பாவங்களையும் போக்கும்
பிரதோச வழிபாட்டினைக்கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும்
பெறுவோமாக. மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். இந்துவாக வாழ்வோம்
இந்து தர்மம் காப்போம்.
இனி
பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து
நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி
உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30
மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட
வேண்டும்.
எல்லா
பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்""""
என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை)
சனிக்கிழமையில் வந்தால் """"மஹாப் பிரதோஷம்"""" என்று வழங்கப்படுகிரது.
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம்
சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்
போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம்
ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
பிரதோஷ
காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை
மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும்
வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை
பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம்
வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய
என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த
பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து
கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
கார்த்திகை மாத அமாவாசையில் ஓம் சிவ சிவ ஓம் மந்திர ஜபம் முதன் முதலாக இந்த நாளில் ஜபிக்க ஆரம்பிக்கலாம். வெகு
நாட்களுக்கு முன்பு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து, தொடர்ந்து ஜபிக்க
இயலாதவர்களும் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் உங்களுக்கு வசதியான
நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
அப்புறம்
ஒரு முக்கிய செய்தி: 21 வயதுக்குக் குறைவானவர்கள், ஓம்சிவசிவஓம் ஜபிக்கக்
கூடாது என்பது விதி. ஆனால், 21 வயதை விட குறைந்த ஆண்கள்,பெண்கள்
ஓம்சிவசிவஓம் ஒரு நாளுக்கு ஒரே ஒரு முறை 108 தடவை எழுதலாம் 21 வயதை
விடக்குறைவான வயதுடையவர்கள் இந்த மந்திரத்தை எழுத ஆரம்பித்தப்பின்னர்
எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது. அசைவ சூப்கள், அசைவம் மறைமுகமாக கலந்திருக்கும் உணவுகள் (கேக்குகள், பன்னாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்) பயன்படுத்திடக் கூடாது.
அதே
சமயம், ஒரு நாளுக்கு ஒரே ஒரு 108 முறை மட்டுமே எழுத வேண்டும். அதை
விட,அதிகமாக எழுதுவது தப்பு. ஏனெனில், அதற்கு மேல் எழுதும்போது, அவர்கள்
மனதுக்குள் உருப்போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால்,ஏற்படும் அதீத
சிவ சக்தியை தாங்கும் திறன் கிடையாது.
பிரதோஷம்
என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு
காலங்களிலும், திரயோதசி திதி' வருகிறது அல்லவா! இவை சனிக்கிழமைகளில்
வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபக்ஷ திரியோதசி எனின்
மகாப்பிரதோஷம் என வழங்கப்படும்.
இனி
பிரதோஷ மகிமை என்ன என அறிவோம். பிரதோஷ காலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம்
ஆகும். திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும்
அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய
வேளை தான் பிரதோஷ வேளை ஆகும்.
அவ்வாறு
பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை தான். எனவே சனிப் பிரதோஷம் மிக
மிக விசேஷமானது ஆகும். இது போல திங்கட்கிழமை வரும் திரயோதசியை சோம
பிரதோஷம்' என்றும், செவ்வாய் பிரதோஷம்' என்றும், வியாழக்கிழமைகளில் வரும்
திரயோதசியை குரு பிரதோஷம்' என்றும் கூறுவது மரபு.
திரயோதசி
தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி நித்ய பூஜையில் பக்தியோடு ஈடுபட்டு
உபவாசமிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து எள் முடிச்சுடன்
நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
மாலையில் சிவாலயம் சென்று நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து சிவபெருமானை
உளாமற ஆராதிக்க வேண்டும்.
அன்றைய
தினம் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது ஆகும். பிரதோஷ் விரதமிருந்து
சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் நமது ஈடு இணையற்ற பக்திக்கு
திருவுள்ளம் கசிந்து சிவபெருமான் சனீஸ்வர பகவான், நந்திதேவர், முருகன்,
விநாயகர் போன்றோர் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வும், சிவஞான பக்தியும்,
புத்தியும் அளித்து சர்வ மங்களமுடன் வாழ அருள் பாலிப்பர்.
பிரதோச
வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும்.
தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால்
குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம்
செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4
மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.
திங்கட்கிழமை
பிரதோசம் சோமா வாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமை பிரதோசம் சனிப்பிரதோசம்
என்றும் அழைக்கப்படும். பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்போம்.
அமிர்தத்தைப் பெறவேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து
கடைந்த போது ஆல கால விஷம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்
தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விஷம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி
திதியாகும்.
ஆலகால
விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம்
முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம்
முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு
நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்டத்தை அழுத்த
விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது.
அன்று
முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று
அழைக்கப்படலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து
திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசி அன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை
உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி
மகிழ்ந்திருந்தனர்.
மறுநாள்
திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபெருமானிடம் தங்களை
மன்னிக்கும்படி மன முருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவ
பெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசபதேவரின்
கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார்.
இது பிரதோச வேளையாகும்.
அன்று
முதல் திரயோதசி திதியன்று மாலை 4-6 மணி பிரதோச காலம் என வழங்கலாயிற்று.
அமாவாசையிலிருந்து 13ம் நாளும், பவுர்ணமியில் இருந்து 13-ம் நாளும்
திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.
மகாசிவராத்திரி:
மாதந்தோறும்
அமாவாசை நாளில் இருந்து வரும் 1வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ
நாட்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை
இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்நாளில் சிவன் கோவில்களுக்கு சென்று
ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள்
வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி
அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 1வது சதுர்த்தசியன்று வருவது
மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம்,
சுந்தர புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு
கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரக தோஷங்கள் நீங்கும்:
தேய்பிறை
பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் போது ராகு காலமும் பிரதோச வேளையும்
கூடிவரும் 4.30-6 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில்
பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவருக்கு முனிவர் சாபம்,
முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
13
பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில்
சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூஜை செய்து அவர்கள் செய்த சகல
பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும். சகல
பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைபிடித்து வாழ்வில் சகல
நலனும் பெறுவோம்.
நந்திதேவர் வழிபட்ட பாதையும், திரிசூலமும்:
சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில்
அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான
நந்திதேவர் தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப
விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம்
அருளினார்.
ஆனால்
அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம்
வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச் செய்து
முறைப்படி பிரதோச பூஜை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம்
பெற்றார்.
நந்திதேவர்
செய்த பூசையானது கொடி மரத்தையும், பலி பீடத்தையும் இடது புறமாக கடந்து
நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று
பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசவர்வரை சென்று பின்
மீண்டும் பிரதட்சணமாக நந்திதேவர் வரை வந்து நந்தி தேவருக்கு வலதுபுறம்
நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி ஓம்ஸ்ரீம்ஹரீம்
ஐம்க்லீம் சௌம் நமோ பகவதே' என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து
பூஜை செய்தார். நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம்
அமையும்.
சிவலிங்க தத்துவம்:
கண்களால்
காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட
அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர்
ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார்
என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
லிங்கம்
என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக்
கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக்
காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே
ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும்
வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே
பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் உருவம் உணர்த்துகிறது. லிங்க
உருவில் பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும்
விளங்குகின்றன.
இதன்
மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று
செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை
உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது ருத்ரம்.
சிவனடியார்கள்,
பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய்,
பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய்,
அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது. எனவே சிவலிங்க உருவத்தை பற்றி சொல்வோர்
என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவரவர் இயல்புக்குத் தக்கபடி
அனுமானிக்கட்டும்.
ஆலகாலமும் அமுதாகும் !
பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.
நால்வர் பெருமக்கள் துதி.
இப்பூவுலகின்கண்
வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு
படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர்,
ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும்
நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு,
நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது. ஆதிகாலந்தொட்டே
நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி
பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின்
வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.
மகாப் பிரதோசத்தின் மகிமை :
சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது

ஒரு பிரதோசம் பார்ப்பது
பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும். பதினோரு
பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும். நூற்று
இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
சிவாலயங்களில்
சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். பிரதோச
விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது
திண்ணம்.
துன்பங்கள்
விக்கினங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான் விக்னேசுவரன்
என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும்,
அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு
பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.
கிறித்துவ
மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத
குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும்
கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ
மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.
இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.
ப்ர
- தோசம் - மிக்க தோசம், எனப் பொருள். அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய
தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான்
பிரதோச வழிபாடு.
பிரதோச
காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி
அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல்
உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி
அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.
பிரதோச
காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம்,
மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும்
தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம்
இயம்புகின்றது.
பசுவின்
திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும்
மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும்
கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு,
வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் இலட்சுமி
கடாட்சம் நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர்.
ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன் இப்பிரதோச காலத்தில்.
தேவர்கள்
வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக
அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச
காலமாகும்.
இப்பிரதோச
நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான
வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத
உண்மையாகும்.